ஞாயிறு, 10 ஜூலை, 2016

60.மாதுளைத் தைலம்.


















மாதுளம்பழத்தோல்  800 கிராம்,
கடுக்காய் தோல்        100 கிராம்,
தான்றிக்காய் தோல் 100 கிராம்,
நெல்லிக்காய் தோல்   50 கிராம்,
அக்கரகாரம்                  25 கிராம், 
கோஷ்டம்                       25 கிராம், 
கிராம்பு                            25 கிராம்,

முதலில் மாதுளம்பழத்தோலை சிறு துண்டுகளாக நறுக்கி இடித்து பஞ்சு போல் நசுக்கி ஒரு குடிநீர் பாண்டத்தில் போட்டு 2 படி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துச் சிறுக எரித்து ஒருபடி அளவிற்குத் சுண்டி வந்த சமயம், மற்றுமுள்ள  சரக்குகளை இடித்துச் சூரணம் செய்து போட்டு பின்னும் சிறிது நேரம் எரித்துத் தண்ணீரானது கால்படி அளவிற்கு காணும்போது கீழிறக்கி ஆறவிட்டுப் பிசைந்து, பிசைந்து வடித்து கியாழத்தை ஒரு தைல பாண்டத்தில் விட்டு அத்தனுடன் அரைகால் படி சுத்தமான எள் எண்ணெய் விட்டு பதமுறக் காய்ச்சி வடித்து பத்திர படுத்தவும்.

பிரயோகம்:  பெண்கள் இந்த தைலத்தை தங்கள் மர்ம ஸ்தானத்தில் இலேசாக தடவிவர வேண்டும்.  

தீரும் வியாதிகள் : குழந்தைகளுக்கு பால் கொடுத்ததால் உண்டான ஸ்தனத்தளர்ச்சி,அடுத்தடுத்துப்  குழந்தை பெற்றதினால் நேர்ந்த மர்ம ஸ்தானத்தளர்ச்சி  இறுகிக் கெட்டிப்படும்.(தொங்கிய மார்பகம் இறுகி பிகித்தம் உண்டாகும் 
மார்பகம் நிமிரும்,
மார்பகம்  இறுகும்,
சுக பிரசவத்தினால் உண்டான யோனி தளர்ச்சி நீங்கி யோனி சுருங்கும்,
யோனி வாய் சிறியதாக  இறுகி இன்பம் கூடும்.
தொங்கிய தசைகள் இறுக்கம் உண்டாக்கும் .)


மேலும் விவரங்களுக்கு :